நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் வீட்டில் நேர்ந்த சோகம் .! கண்ணீரில் மூழ்கிய திரையுலகினர்!!

நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் வீட்டில் நேர்ந்த சோகம் .! கண்ணீரில் மூழ்கிய திரையுலகினர்!!


y-g-mahendran-mother-dead

சினிமாத் துறையின் முன்னோடியாகவும்,அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்ற நாடக குழுவை நடத்தி வந்தவர்  ஒய்.ஜி.பார்த்தசாரதி. இவர் பல திறமையான கலைஞர்களை நாடகத்தின் மூலம் வளர்த்து சினிமாவிற்குள் அடியெடுத்துவைக்க உறுதுணையாக நின்றவர். இவரது  மனைவி ஒய்.ஜி.ராஜலட்சுமி. இவரது மகன் நாடக கலைஞரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன்.

yg mahendran

ஒய்.ஜி.ராஜலட்சுமி சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இவருக்கு 93 வயதான நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு  சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் காலமானார்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பள்ளி பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது  இறுதி சடங்கு நாளை மாலை நடைபெறவுள்ளது.