அது என்னோட புருஷன்.! 4 நாட்களாக நாகப்பாம்புடன் வாழ்ந்து வந்த பெண்! பகீர் கிளப்பும் சம்பவம்!!

அது என்னோட புருஷன்.! 4 நாட்களாக நாகப்பாம்புடன் வாழ்ந்து வந்த பெண்! பகீர் கிளப்பும் சம்பவம்!!


women-live-with-snake

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாகபாம்பை, இரு வருடங்களுக்கு முன் உயிரிழந்த தனது கணவரின் மறுபிறவி என கூறி அதனுடன் ஒரே வீட்டில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், குல்லஹள்ளி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சாரதா மோனேஷா கம்பரா. அவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா. இவர் கடந்த  இரு வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மோனேஷா வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோனேஷா வீட்டிற்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதனைக் கண்ட மோனேஷா கொஞ்சம் கூட பதறவில்லை. மேலும் பாம்பு வடிவில் தனது உயிரிழந்த கணவர்தான் வந்துள்ளார். அவருக்கு யாரும் எந்தத் தீங்கும் செய்ய கூடாது என கூறியுள்ளார்.

மேலும் நான்கு நாட்கள் அந்த பாம்புக்கு பால் ஊற்றி அதனுடனேயே இருந்து வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு மோனேஷாவிற்கு பாம்பு குறித்த ஆபத்தை விளக்கி கூறியுள்ளனர். பின்னர் அவர் ஒப்புக் கொண்டதற்கு பிறகு வனத்துறைக்கும், போலீசாருக்கும்  தகவல் தெரிவித்து பாம்பை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.