வைல்ட் கார்ட் என்ட்ரி விஜயலக்ஷ்மி ஓட்டு கேட்டு டிவிட்டர் பக்கத்தில் பிரச்சாரம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

Wild card entry wijaylakshmi asked to vote on Twitter page Fans shocked


Wild card entry wijaylakshmi asked to vote on Twitter page Fans shocked

தமிழகத்தில் தற்போது மிகவும் பிரபலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் இந்த பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாஷன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொருவராக வெளியேற்ற பட்டனர். அந்த வகையில் கடந்த வாரம் ஆரம்பத்தில் 6 போட்டியாளர்கள் இருந்தனர். அதில் கடந்த வாரம் அந்த வீட்டிர்குள் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்ற படுவார்கள் என அறிவிக்க பட்டது. அந்த சூழ்நிலையில் கடந்த வாரம் இருந்த ஆறு போட்டியாளர்களிள் நடிகர் பாலாஜி மற்றும் நடிகை யாஷிகா வெளியேற்ற பட்டார்.

மேலும் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் 4 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த போட்டியாளர்களிள் இருந்து இந்த வாரத்தின் இறுதியில் 2 போட்டியாளர்கள் வெளியேற்ற படுவார்கள். இந்த சூழ்நிலையில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியான நடிகை விஜயலெக்ஷ்மியும் தற்போது இந்த இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். 

இந்நிலையில் நடிகை விஜயலெக்ஷ்மியின் டிவிட்டர் அக்கவுன்டிலிருந்து, எனக்கு இறுதி போட்டியில் வெல்வதற்கு வாக்களியுங்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவுகிறது.