90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
47 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கல..! என்ன காரணம்..? நடிகை சித்தாரா விளக்கம்..!

தனக்கு 47 வயது ஆகியும் இன்றுவரை திருமணம்செய்துகொள்ளாதது ஏன் என பிரபல நடிகை சித்தாரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சித்தாரா காவேரி என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை அடுத்து 1989-ம் ஆண்டு வெளியான புதுப்புது அர்த்தங்கள் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார்.
தமிழில் இவர் நடித்த புதுவசந்தம் என்ற திரைப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதனை அடுத்து படையப்பா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த இவர் கன்னட படங்களில் பிசியாக நடித்துவந்தார். தற்போது 47 வயதாகும் நடிகை சித்தாரா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
சமீபத்தில் சித்தாராவை பேட்டி எடுத்த தெலுங்கு ஊடகம் ஒன்று இதுகுறித்து கேள்வி எழுப்பியது. அதற்க்கு பதிலளித்த நடிகை சித்தாரா, இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுத்து அதில் இன்று வரை உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், தந்தைமீது அதிக பாசத்துடன் இருந்தேன். அவர் இறந்த பிறகு திருமணம் செய்து கொள்வதில் முற்றிலும் எனக்கு ஆர்வம் இல்லாமல்போய்விட்டது. இப்படி தனியாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.