சினிமா

அஜித் ஏன் பொது இடங்களுக்கு வருவது இல்லை..! முக்கிய தகவல் கூறிய பெண் பந்தைய வீராங்கனை.!

Summary:

Why ajith not coming to public places

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஹீரோக்களில் ஒருவர். பெரும் புகழ் மற்றும் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்ளை கொடுத்த நடிகர். இப்படி ஏகப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர் தல அஜித். இப்படி இருந்தும், அஜித் ஏன் பொது நிகழ்வுகளுக்கு வெளியே வருவதில்லை என்ற கேள்வி பலர் மத்தியில் உள்ளது.

அஜித் மிகவும் அரிதாகவே பொது இடங்களில் தோன்றுவார், தனது திரைப்படங்களின் ஆடியோ வெளியீடு அல்லது விளம்பரங்களுக்காகவும் வருவதில்லை. இந்நிலையில், சென்னையின் பிரபல பெண் பந்தய வீரர் அலிஷா அப்துல்லா, அஜித் ஏன் வெளியே வருவதில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அஜித் சார் வெளியே வரும்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொள்கிறார்கள். அவரை தனியே இருக்க ரசிகர்கள் அனுமதிப்பதில்லை. மேலும், அஜித் பந்தயம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு மூச்சு கூட விட முடியாத அளவிற்கு அவரை நெருங்கிவிட்டனர். அவரால் நடக்க கூட முடியவிலை.

இதுபோன்ற காரணங்களால்தான் அஜித் வெளியே வருவதில்லை என அவர் கூறியுள்ளார்.


Advertisement