சினிமா

அஜித் ஏன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை? இயக்குனர் சிவா கூறும் அதிர்ச்சி காரணம்!

Summary:

Why ajith not attending functions director siva answer

தமிழ் சினிமாவில் சற்று வித்தியாசமானவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இந்த உயரத்திற்கு வளர்ந்துள்ளார் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித்துக்கு ரசிகர் மன்றமே கிடையாது.

தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக விஸ்வாசம் படம் பார்க்க செல்கின்றனர்.

பொதுவாக தாங்கள் நடித்த படம் இசை வெளியீட்டு விழா, பிரஸ் மீட், பட வெற்றிவிழா என பிரபலங்கள் கலந்துகொள்வது உண்டு. ஆனால், அஜித் மட்டும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். அஜித் ஏன் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது.

தற்போது அதற்கான காரணம் குறித்து விளக்கம் கூறியுள்ளார் இயக்குனர் சிவா. இதுபற்றி அவர் கூறுகையில், அஜித்  விமான நிலையம் உள்ளிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடி விடுகிறது. இதனால் யாருக்கும் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதே முதல் காரணம். படப்பிடிப்பு நடக்கும்போதே சில சமயங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் படப்பிடிப்பை ரத்து செய்திருக்கிறோம்.

யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அஜித் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று கூறியுள்ளார் இயக்குனர் சிவா.


Advertisement