சினிமா

யார் அந்த சொப்பன சுந்தரி? தெருஞ்சுக்கணுமா? இங்க வாங்க!

Summary:

Who is sopana sundhari new game show in sun life

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வந்த சொப்பன சுந்தரி நகைச்சுவையை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த நகைச்சுவை பிரபலமானது. அதில் இருந்து அந்த சொப்பன சுந்தரி யார் என்பது அனைவர் மத்தியுலும் கேள்வியாக இருந்தது. இதை அடிப்படையாக கொண்டு பலதிரைப்படங்களில் நகைசுவை காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. என்னதான் சீசன் இரண்டு தொடங்கப்பட்டாலும், சீசன் ஓன்று பெற்ற பெரும் புகழும் இரண்டாவது சீசன் பெறவில்லை என்றே கூறலாம்.

மேலும் இந்த கேம் ஷோவில் விளையாடிய அணைத்து நட்சத்திரங்களும் மேலும் பிரபலம் அடைந்தார்கள். படவாய்ப்புகளும் குவிந்தன. தற்போது இதே நிகழ்ச்சி போன்று சன் குழுமத்தின் மற்றொரு சேனலான சன்லைப் தமிழில் சொப்பனசுந்தரி என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்னர்.

சிறந்த மாடல் அழகியை தேர்ந்தெடுக்க இந்த போட்டி நடக்கப்போகிறது. இதில் 10 மாடல் அழகிகள் கலந்துகொள்கிறார்கள். பிரசன்னா இந்நிகழ்ச்சியை தொகுத்துவழங்குகிறார்.
இந்த சொப்பன சுந்தரி நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

எனவே இந்த நிகழ்ச்சி மூலம் யார் அந்த சொப்பன சுந்தரி என்ற கேள்விக்கு விடைதெரிய போகிறது. 


Advertisement