சினிமா

அஜித்துக்கு 'தல' னு பெயர் வச்சதே இந்த பிரபல நடிகர்த்தனம்! முதல் முறையாக வெளியான ரகசியம்!!

Summary:

Who gave name thala to ajith

இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அஜித். அஜித் என்பதைவிட இவரை தல என அழைப்பதையே இவரது ரசிகர்கள் பெருமையாக நினைக்கின்றனர். இயக்குனர் AR முருகதாஸ் இயக்கிய தீனா படத்திற்கு பிறகு தல என்ற பெயர் இவருடன் இணைந்துவிட்டது.

இந்நிலையில் அஜித்துக்கு தல என்ற பெயர் எப்படி வந்தது? அந்த பெயரை யார் வைத்தார் என்பது குறித்து முதல் முறையாக கூறியுள்ளார் இயக்குனர் AR முருகதாஸ். AR முருகதாஸ் - ரஜினி கூட்டணியில் உருவாகிவரும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டுவிழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் AR முருகதாஸ் ரஜினியின் பெருமைகள் பற்றி பேசுகையில் அஜித்துக்கு தல என பெயர் வைத்ததே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துதான் என கூறினார். அவர் கூறி முடித்ததும் ரஜினி - அஜித் ரசிகர்கள் கைதட்டி அந்த அரங்கத்தையே அதிரவிட்டனர்.


Advertisement