அடுத்தடுத்த சிக்கலில் மாட்டும் சிவகார்த்திகேயன்.. இப்போ என்ன பிரச்சனை தெரியுமா.?

விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். இவர் 2012ம் ஆண்டு பசங்க படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான "மெரினா" திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் இவர், சமீபத்தில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். இசையமைப்பாளர் டி. இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும், இனி அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா, "சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தை சேர்த்து வைக்க முயற்சி செய்ததையே இமான் அப்படி கூறியுள்ளார்" என்று விளக்கமளித்தார். இதற்கு சிவகார்த்திகேயன் இன்றுவரை விளக்கமளிக்காதது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்த திரைப்படங்கள் மூலம் உண்டான கடனை உடனே அடைக்குமாறு சம்மந்தப்பட்டவர்கள் நெருக்கி வருவதாகவும், இந்த பிரச்சனைக்கு தனுஷ் தான் காரணம் என்றும் பேச்சு அடிபடுகிறது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிக்கலில் மாட்டிவருவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.