"யாரும் பசியோட இருக்கக்கூடாது"; விஜயகாந்தின் இறுதிச்சடங்குக்கு வந்த மக்களுக்கு உணவளித்த தன்னார்வலர்கள்.. மனிதத்தால் குவியும் பாராட்டுக்கள்.!



volunteers-provide-food-to-who-arrived-koyambedu-vijaya


கருப்பு எம்.ஜி.ஆர்., புரட்சி கலைஞர், கேப்டன் என்று புகழப்பட்ட நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது 71 வயதில் உடல்நலக்குறைவால் நேற்று காலை இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு திரையுலகினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் வந்து தங்களின் இரங்கலை பதிவு செய்தனர். 

தேமுதிக கட்சி தொண்டர்களும், விஜயகாந்தால் நலனடைந்த பொதுமக்களும் சென்னையில் உள்ள அவரின் வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. 

vijayakanth

இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் அரசு மரியாதையுடன் நிறைவு பெற்றது. உள்ளூர், வெளியூர் என ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்த நிலையில், அவர்கள் உணவு சாப்பிட வழியின்றியும் தவித்துப்போயினர். செய்தியாளர்கள், காவல் துறையினர் தொடர் செய்தி சேகரிப்பு, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

திரைப்பட படப்பிடிப்புகளில் ஒவ்வொருவரின் தரமான உணவுக்காக போராடிய கேப்டனின் இறுதி சடங்கு நிகழ்வுக்கு வந்துவிட்டு, யாரும் பசியுடன் இருக்க கூடாது என தன்னார்வலர்கள் அதிரடியாக களமிறங்கி தங்களால் இயன்ற இடங்களில் உடனடியாக உணவுகளை தயார் செய்து தொடர்ந்து விநியோகித்தனர்.

இந்த மனித நேய செயலானது பலரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.