13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
VJ ரம்யாவின் பாய் ப்ரண்ட் இவர்தானா? பிறந்தநாளை முன்னிட்டு அவரே வெளியிட்ட புகைப்படம்.! இதோ..
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடியான தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், நாடகங்கள், படங்கள் என மக்களை தன் பக்கம் பெருமளவில் ஈர்த்துள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம். அதில் ஒருவர்தான் VJ ரம்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் , பல்வேறு விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்த ரம்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் அவரது ஜிம் பயிற்சியாளர் மனித எலும்பு கூடு ஒன்றை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். அதன் அருகில் இருந்து புகைப்படம் எடுத்த ரம்யா அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தனக்கு பொருத்தமான பாய் ப்ரண்ட் கிடைத்துவிட்டதாக கிண்டலாக பதிவிட்டுள்ளார்.