மறைந்த நடிகர் விவேக் நடித்து வெளியாகாமல் இருக்கும் படங்கள்.! இவர்களின் படமுமா.?

மறைந்த நடிகர் விவேக் நடித்து வெளியாகாமல் இருக்கும் படங்கள்.! இவர்களின் படமுமா.?



vivek-was-acting-movie

தமிழ்  சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார். அவரது மறைவு இந்திய சினிமாவில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.

நகைச்சுவை நடிகர் விவேக் சினிமாவுக்கு வந்து இத்தனை வருடத்தில் இதுவரை கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததே இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார். ஆனால் அந்த படம் நிறுத்தப்பட்டதால் தற்போது அந்தப் படத்தில் விவேக் நடித்த காட்சிகளை என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

vivekஇதனையடுத்து சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் என்பவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படத்திலும் காமெடி நடிகராக நடித்து வந்துள்ளார். கடைசியாக விவேக்  சரவணன் அருள் படப்பிடிப்பில் இருந்து பல வீடியோக்களை வெளியிட்டார். அந்தப்படமும் அடுத்ததாக வெளியாக உள்ளது. மேலும் நடிகர் விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படமும் வெளியாகவுள்ளது. பெயரிடப்படாத சில படங்களிலும் விவேக் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.