சினிமா

பிக்பாஸ் சேரனுக்காக நடிகர் விவேக் செய்த காரியம்.! கொந்தளித்த ரசிகர்களால் மீண்டும் வெடித்த சர்ச்சை!!

Summary:

Vivek support ro cheran

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 105 நாட்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் ஒருவராக கலந்துகொண்டவர் தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சேரன். 

 பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர் வயது ஒரு தடையில்லை என்பதற்கேற்ப அங்கிருந்த இளைஞர்களுக்கு இணையாக போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் சேரன் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர் என்பதையும் தாண்டி நல்ல அப்பாவாகவும் , அண்ணனாகவும், நண்பனாகவும் விளங்கினார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரன் பல்வேறு பேட்டிகளில் கலந்துகொண்டார். அப்பொழுது சேரன் கவின் - லாஸ்லியாவின் காதல் பற்றியும் பேசியிருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் சமூக வலைதளங்களிலும் மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். அதனை தொடர்ந்து சேரன் தான் இனி கவின் லாஸ்லியா விவகாரத்தில் தலையிட போவதில்லை, என் விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என கூறியிருந்தார்.

 இந்நிலையில் நடிகர் விவேக் தற்போது சேரனுக்கு ஆதரவளிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அது முடிந்த பிரச்சினையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் உள்ளது என்ன ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement