சினிமா

சிம்டான்காரன் அர்த்தம் இது தான்...! விவேக் விளக்கம்...!

Summary:

vivek-speaks-about-simtaangaaran

சிம்டான்காரன் அர்த்தம் இது தான்...! விவேக் விளக்கம்...! 

தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகரான தளபதியின் சர்க்கார் படம் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் நேற்று இசைவெளியீட்டு விழா நடந்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 

இசைவெளியீட்டு விழாவில் சர்க்கார் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவ்வப்போது அதில் கலந்துகொண்ட நிறையபேர் மேடையில் பேசினார்கள். இதனையடுத்து இசை வெளியீட்டு விழாவிலே விவேக் அவர்கள் பேசுகையில், சிம்டாங்காரனுக்கு அர்த்தம் கூறினார்.

நடிகர் விவேக் பேசுகையில் "யாரை பார்த்தல் கண் சிமிட்டாமல் பார்க்க தோனுகிறதோ, அவர்கள் தான் சிம்டாங்காரன் என்று அர்த்தம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கூறுகையில், இது பாடலுக்கு அர்த்தம் கூறும் நேரமல்ல, எனவே இன்னொரு நாள் முழு பாடலுக்கும் அர்த்தம் கூறுவதாக கூறியுள்ளார்... 


Advertisement