தயவுசெஞ்சு இதை மட்டும் செய்யாதீங்க! போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலான நிலையில் நடிகர் விவேக் விடுத்த வேண்டுகோள்!



Vivek request fan to dont compare anyone

தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில்,  தனது காமெடியால் ரசிகர்களை கட்டி இழுத்து முன்னணி காமெடி நடிகராக திகழ்பவர் விவேக். சின்ன கலைவாணரான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக் இப்போதெல்லாம் வித்தியாசமான அசத்தலான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் தற்போது பிளாக் அண்ட் பிளாக் கோட் சூட்டில், கூலிங்கிளாஸ், சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில்  ஹீரோக்களையே மிஞ்சும் அளவிற்கு செம மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனைக் கண்ட நெட்டிசன்கள் சிலர் அதனை பல முன்னணி ஹீரோக்களுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வந்தனர்.

vivek

இதனைக்கண்ட விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,அன்பு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்.எனது சமீபத்திய போட்டோ ஷுட் படங்கள் பார்த்து விட்டு, ஹீரோக்களுக்கு(பெயர் குறிப்பிட்டு) போட்டியாக விவேக், என்று செய்தி வருகிறது.நான் யாருக்கும் போட்டி அல்ல.யாரையும் யாருடனும் ஒப்பிடல் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என விவேக் தெரிவித்துள்ளார்.