இடுப்பழகால் சுண்டியிழுத்த ஜோக்கர் படநடிகைக்கு ஆதரவாக, இந்த பிரபல நடிகர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

இடுப்பழகால் சுண்டியிழுத்த ஜோக்கர் படநடிகைக்கு ஆதரவாக, இந்த பிரபல நடிகர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!


vivek-recommend-for-actress-ramya-pandian

தமிழில் ஜோக்கர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது.

ஜோக்கர் படத்தை அடுத்து இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், வரும் வாய்ப்புகள் அனைத்தும் மாடர்னான கதாபாத்திரம் அமையாத நிலையில் அவர் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

ramya pandian

அந்த புகைப்படங்களில் ரம்யா பாண்டியன் சேலை அணிந்தும் மாடர்னான உடைகள் அணிந்தும் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதில் சேலை அணிந்து தனது இடுப்பை காட்டும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பரவியது.

இந்நிலையில் அவரை பாராட்டி காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், பண்பும்,அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யாபாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர்,ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என பதிவிட்டிருந்தார். அதற்கு ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.