ஒட்டுமொத்த மக்களும் சோகம்.! நடிகர் விவேக் காலமானார்.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ஒட்டுமொத்த மக்களும் சோகம்.! நடிகர் விவேக் காலமானார்.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!



vivek passed away

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேக்குக்கு இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

vivek

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். 59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார். மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.