சைலன்ட் பேபி யுவனுக்கு, ரவுடி பேபி மூலம் அசத்தலாக வாழ்த்து கூறிய நடிகர் விவேக்! தீயாய் பரவும் வீடியோ!

சைலன்ட் பேபி யுவனுக்கு, ரவுடி பேபி மூலம் அசத்தலாக வாழ்த்து கூறிய நடிகர் விவேக்! தீயாய் பரவும் வீடியோ!vivek-birthday-wishes-to-yuvan-shankar-raja

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தனது இசையால் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். மேலும் இவரது பாடலுக்கென ஏராளமான ரசிகர் கூட்டமே உள்ளது.

இவ்வாறு பிரபல இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக், யுவன் சங்கர் ராஜா இசையில் மாரி 2 படத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ரவுடி பேபி பாடலை பியானோவில் வாசித்து அசத்தலாக வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவருக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.