சினிமா

அவருகிட்ட கத்துக்கோங்க! நடிகர் விஜய்யை கேலிசெய்த மீரா மிதுன்! நச்சென மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த நடிகர் விவேக்!

Summary:

Vivek advice to meera mithun about teasing vijay

பிக்பாஸ் மீரா மிதுன் தமிழ் சினிமாக்களில் வாரிசு நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் நெபடிசம் ப்ராடெக்டுகள் என்றும் சமூக வலைதளங்களில் மோசமாக பேசி தொடர்ந்து  வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை மிகவும் தரக்குறைவாக அவதூறாக பேசியும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் கொந்தளித்து போனர். மேலும்  ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலரும் மீரா மிதுனுக்கு  கண்டனம் தெரிவித்தனர். 

இதற்கிடையில் தளபதி விஜய் ட்விட்டரில் மகேஷ்பாபு விடுத்த சவாலை ஏற்று, நேற்று மரக்கன்று நட்டு, அந்த புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் அதற்கு பெரும் பாராட்டுகள் கிடைத்து வந்தது. இந்நிலையில் மீரா மிதுன் வீட்டுக்குள் மரம் நடுவதால் எந்தப் பயனும் இல்லை  நடிகர் விவேக்கைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் மகேஷ் பாபு சார் மற்றும் விஜய் சார் இருவருக்குமே மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.  இயற்கைக்கு நல்லதாக அவர்கள் செய்யும் இந்த விஷயங்கள் ரசிகர்களால் பெருமளவில் ஈர்க்கப்பட்டு அவர்களும் அதனை பின்பற்றுவர். அவர்களை பாராட்ட வேண்டும். மேலும் ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement