50 ஆண்டுகள் சாதனையை முறியடித்த தல அஜித்! வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பு!

50 ஆண்டுகள் சாதனையை முறியடித்த தல அஜித்! வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பு!


viswasam-movie-releasing-in-kanada

தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் பிரபலமானவர் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் கூட்டமே உள்ளது. விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் தல அஜித். பிங்க் படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழிலும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith Kumar

இந்நிலையில் அஜித்தின் புது சாதனை குறித்த தகவல் ஓன்று வைரலாகிவருகிறது. அதாவது கன்னட திரையுலகினரின் எதிர்ப்பு காரணமாக கன்னடத்தில் பல ஆண்டுகளாக பிற மொழிப் படங்கள் மொழிமாற்றம் செய்யப்படாமல் நேரடியாகவே வெளியாகி வந்தது.

1960-களின் தொடக்கம் முதல் நடைமுறையில் இருந்து வரும் இந்த வழக்கத்தை கடந்த 2017-ம் ஆண்டு அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் முறியடித்தது. கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ எனும் பெயரில் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

Ajith Kumar

அந்தப்படம் கன்னட ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றதை தொடர்ந்து அஜித்தின்  ஆரம்பம், விவேகம் என அஜித்தின் படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகின. இந்த படங்கள் கன்னட ரசிகர்கள் மத்தியில் அஜித்துக்கென தனி இடத்தை பெற்றுத்தந்தது. இதனை தொடர்ந்து வெளியான விவேகம், கனடா படங்களுக்கு இணையான வசூலை பெற்றதாகவும் செய்திகள் வந்தன.

இந்நிலையில் விஸ்வாசம் படம் தமிழில் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 'ஜகமல்லா' எனும் பெயரில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகளில் கன்னட மொழியில் அடுத்தடுத்து படங்களை டப் செய்து வெளியிட்டு வெற்றி கண்ட ஒரே பிறமொழி நடிகர் எனும் சிறப்பை அஜித் பெற்றுள்ளார்.