கன்னடத்திலும் கலக்கும் தல அஜித்; எகிறிய விஸ்வாசம் டிஆர்பி.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

கன்னடத்திலும் கலக்கும் தல அஜித்; எகிறிய விஸ்வாசம் டிஆர்பி.!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து தல அஜித்துக்கு நான்காவது அமைந்த படம் விஸ்வாசம். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. ரசிகர்கள் சிலர் கண்ணீருடன் திரையரங்கில்  படம் பார்த்த வீடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இப்படம் இதுவரை தமிழ் தொலைக்காட்சிகளில் மூன்றுமுறை ஒளிபரப்பப்பட்டது. இம்மூன்று முறையும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து விசுவாசம் ஜாகமல்லா என்ற பெயரில் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டது. டப்பிங் செய்யப்பட்ட ஜாகமல்லா கன்னட தொலைக்காட்சியில் 2-வது முறையாக  ஒளிபரப்பப்பட்டது.

BARC வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி ஜாகமல்லா திரைப்படத்தை 58 லட்சத்து 97 ஆயிரம் ரசிகர்கள் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். இந்த வருடத்தின் 29 ஆவது வாரத்தில் கன்னட டிவியில் ஜாகமல்லா படம் தான் முதலிடத்தில் இருக்கிறது. விஸ்வாசம் படத்தின் மூலமாக உதயா டிவி முதலிடத்தை பெற்று இருக்கிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo