
visuvasam movie - thala ajith - sittukuruvi patti
தல அஜித் என்றாலே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை பெற்றவராக இருக்கிறார். அஜித் தற்போது அவர் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் அவருடைய படம் வெளிவரும் நாளுக்காக அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் அடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித் நடிக்கிறார். இவருடன் நயன்தாரா, தம்பி ராமையா,ரோபோ சங்கர், யோகி பாபு, போன்றோரும் மெர்சல் படத்தில் நடித்திருந்த சிட்டுக் குருவி பாட்டியும் இந்த படத்தில் நடிக்கிறார். இவர் ஒரு சில காட்சிகளில் மட்டும் மெர்சல் படத்தில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
#Viswasam Co Actress Grandma #தல கடவுள் மாதிரி,
— Kayal Devaraj (@devarajdevaraj) September 26, 2018
கடவுள்னா அவர்தான் கடவுள் pic.twitter.com/EemJhyLVhL
இவர் அஜித்தை பாராட்டி ஒரு சில வரிகள் மட்டும் இடம் பெற்றிருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதில் அவர் பேசும் போது, அஜித் கடவுள் மாதிரி எங்க கூடத் தான் உட்காருவாறு, எங்க கூடத்தான் சாப்பிடுவாரு, கடவுள்னா அவர்தான் கடவுள் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement