மதத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டதா லால் சலாம் திரைப்படம்.. விஷ்ணு விஷாலின் வைரலான பதிவு..Vishnu vishal twit about Lal salam movie

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுகிறார். சமீபத்தில் அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

movie

இது போன்ற நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தை குறித்து இணையதளத்தில் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். இதன்படி ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் திரையரங்கில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் லால் சலாம்

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இதன்படி இயக்குனர் மோகன் என்பவர் லால் சலாம் படத்தின் கதையை போலவே ஒரு கதையை லைகா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த கதையை வைத்து லால் சலாம் திரைப்படத்தை உருவாக்கப்பட்டதாக சந்தேகத்தில் பேசி வந்தார்.

movie

ஆனால் இதனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மறுத்து வந்தார். இந்நிலையில் விஷ்ணு விஷால் 'லால் சலாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்று அங்கிருந்து தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். அப்பதிவானது "மனிதநேயத்தை விட மதம் ஒன்றும் பெரிதில்லை" என்று லால் சலாம் படத்தை குறிப்பிட்டிருக்கிறார் இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.