நடிகர் விஷ்ணு விஷாலின் அக்கா இவர்தானா! முக்கியமான நாளில் முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!

நடிகர் விஷ்ணு விஷாலின் அக்கா இவர்தானா! முக்கியமான நாளில் முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!


vishnu-vishal-sister-photo-viral

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஷ்ணுவிஷால். அதனைத் தொடர்ந்து அவர் முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் ராட்சசன் திரைப்படம் செம ஹிட்டாகி, வசூல் சாதனை படைத்தது. பின்னர் இறுதியாக விஷ்ணு விஷால் காடன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணுவிஷால், பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா என்பவரை காதலித்து வந்தார். பின்னர் அண்மையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அக்கா ஒருவர் உள்ளாராம். அவருக்கு இன்று பிறந்தநாள். இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி முதல்முதலாக அவருடன் இருக்கும்  புகைப்படம் ஒன்றை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.