விஷ்ணு விஷாலுக்கு அமலாபாலுடன் திருமணம். விஷ்ணுவே வெளியிட்ட திடீர் தகவல்.!

விஷ்ணு விஷாலுக்கு அமலாபாலுடன் திருமணம். விஷ்ணுவே வெளியிட்ட திடீர் தகவல்.!


vishnu vishal amala paul marriage

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். 

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான விஷ்ணு ஜீவா, குள்ளநரி கூட்டம், நேற்று இன்று நாளை,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெரும்  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் விஷ்ணு சமீபத்தில் தனது மனைவியை  விவாகரத்து செய்துள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். 

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால், இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

 மேலும் இவர்கள் இருவரும் ராட்சசன் படத்தில ஜோடியாக  நடித்ததால் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வந்தனர்.

 இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "என்ன ஒரு அபத்தமான செய்தி.. தயவுசெய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே..

 எங்களுக்கும்  வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக, எதையாவது எழுதாதீர்கள் என பயங்கர கோபமாக பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.