லக்ஷ்மி மேனனுடன் திருமணமா? விஷால் அளித்த விளக்கம்.!Vishal tweet about marriage controversy

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஷால். இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

vishal

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் விஷால், தன்னுடன் நடித்த லட்சுமி மேனனை திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. 

vishal

இதனையடுத்து நடிகர் விஷால் அதனை மறுத்துள்ளார். இது குறித்து தலைவர் ட்விட்டர் பக்கத்தில், என்னை பற்றிய போலி செய்திகளுக்கும் வருதிகளுக்கும் நான் பதில் அளிப்பதில்லை‌. லட்சுமி மேனன் ஒரு பெண் அவரது அடையாளத்தை சிதைக்காதீர்கள். நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அறிவிப்பேன். என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.