என்னோட திருமணம் அதற்கு பிறகுதான்.. எடுத்த முடிவில் செம ஸ்ட்ராங்காக நிற்கும் நடிகர் விஷால்.!

என்னோட திருமணம் அதற்கு பிறகுதான்.. எடுத்த முடிவில் செம ஸ்ட்ராங்காக நிற்கும் நடிகர் விஷால்.!


vishal-said-about-his-marriage

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமான அவர் தொடர்ந்து பல ஆக்ஷன், காதல் மற்றும் குடும்ப திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷால் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக சுனைனா நடித்துள்ளார். மேலும் ராணா புரொடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரித்துள்ளனர். லத்தி படம் தெலுங்கிலும் ரிலீஸாக உள்ளது.

Lathi

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் அவரிடம் எப்போது திருமணம் என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த வேலைகள் முழுவதும் முடிந்த பிறகு வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளேன். கண்டிப்பாக திருமணத்திற்கு எல்லோரையும் அழைப்பேன் என கூறியுள்ளார்.