"ஷூட்டிங்கில் மழை பெய்ததால் கடவுள் ஆசிர்வதித்துவிட்டார்" சந்தோஷத்தில் விஷால்..



Vishal post about his movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் "செல்லமே" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி, மருது, தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஷால், தயாரிப்பாளராகவும் உள்ளார்.

vishal

தற்போது இவர் இயக்குனர் ஹரியுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். "விஷால் 34" என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

முன்னதாக விஷால் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் இயக்குனர் ஹரியுடன் இனைந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. விஷால் - ஹரி கூட்டணியில் இது மூன்றாவது படமாகும். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது.

vishal

இந்நிலையில், காரைக்குடியில் நடந்துவந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து விட்டதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அவர், "கடைசி நாள் படப்பிடிப்பில் மழை பெய்ததை இறைவனின் ஆசீர்வாதமாக கருதுகிறேன்" என்றும் கூறியிருந்தார்.