மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நடிகர் விஷால்.! ஏன்? என்னதான் ஆச்சு? பதறிப்போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ' பட நாயகி ரித்து வர்மா ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வாரமாக பாடல் மற்றும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்குவாரியில் நடைபெற்ற ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது நடிகர் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாம். மேலும் இதில் நடிகர் விஷாலுக்கு கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் அறிவுரையின்படி விஷால் ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.