திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!
தன் சினிமா வாழ்க்கையிலேயே முதன்முறையாக.. இப்படிப்பட்ட ரோலில் நடிக்கும் நடிகர் விஷால்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். அண்மைக்காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சில எதிர்பார்க்குமளவிற்கு வெற்றியை தரவில்லை. விஷால் இறுதியாக வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகிறார். மேலும் லத்தி படத்தை ராணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
லத்தி படத்தில் விஷால் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஷால் முதன்முறையாக திருமணமாகி, 7 வயது சிறுவனுக்கு அப்பாவான ரோலில் நடித்து வருகிறாராம். இதில் அவருக்கு மனைவியாக நடிகை சுனைனா நடிக்கிறார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.