கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் விராட்கோலி செய்த நெகிழ்ச்சியான காரியம்! வைரல் வீடியோ!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் விராட்கோலி செய்த நெகிழ்ச்சியான காரியம்! வைரல் வீடியோ!


Virat Kohli Turns Secret Santa For Children of a Shelter Home in Kolkata

இந்திய அளவில் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் என்ற இடத்தில் உள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. விளையாட்டையும் தாண்டி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார் விராட். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு விளம்பர படத்தை ஒளிபரப்பியது.

அதில், குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இருக்கும் குழந்தைகளிடம், இந்த கிறிஸ்துமஸ்க்கு நீங்கள் யாரை பார்க்கவேண்டும், என்ன பரிசு வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ஸ்பைடர் மேன், அயர்ன் மேனை பார்க்கவேண்டும், சாக்லேட், சைக்கிள், பொம்மை போன்றவை பரிசாக வேண்டும் என குழந்தைகள் கேக்கின்றனர்.

Viratkoli

இந்த வீடியோவை விராட் ரசித்து பார்க்கிறார். உடனே சிற்ஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகள் காப்பகத்திற்கு செல்கிறார் விராட். அங்கு விடுதியின் உரிமையாளர், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன் வரவில்லை. விராட்கோலி வந்தால் ஓக்கவா என கேட்க அணைத்து குழந்தைகளும் ஓகே என சத்தம் எழுப்புகின்றனர்.

உடனே தந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தை கலைத்துவிட்டு விராட்கோலி குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுக்கிறார். அணைத்து குழந்தைளும் சந்தோஷத்தில் விராட்கோலியை கட்டி தழுவுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.