சினிமா

புதிய சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி நடிகருக்கு அடித்த மற்றுமொரு அதிர்ஷ்டம்! செம ஹேப்பியில் குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இத்தொடரில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானவர் வினோத் பாபு.

இவர் இதற்கு முன்பு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தவர். அதனைத் தொடர்ந்து வினோத் பாபு மற்றும் அவரது மனைவி சிந்து இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வினோத் பாபு விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள தென்றல் வந்து என்னை தொடும் எனும் சீரியலிலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் வினோத் பாபு தற்போது அப்பாவாக உள்ளார். அதாவது அவரது மனைவி சிந்து கர்ப்பமாக உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை வினோத் பாபு தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், விரைவில் தங்கள் குடும்பம் வளரப்போகிறது. உங்கள் ஆசீர்வாதமும், வாழ்த்தும் வேண்டும் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement