அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
திடீர் திருமணம் செய்து கொண்ட சுந்தரி நீயும் சுந்தரன் நானும் நடிகரின் மனைவி யார் தெரியுமா? வெளியான புதிய தகவல்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த சீரியலில் சமீபத்தில் தான் ஆரம்பமானது. ஆரம்பமானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் கதாநாயகனாக வினோத் பாபு நடிக்கிறார். மேலும் இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல், அரசியல்,குடும்பம் என வித்தியாசமான கதையை கொண்டு ஒளிப்பாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த நாடகத்தின் கதாநாயகனான வினோத் பாபு அவர்களுக்கு வயலூர் கோவிலில் திடீர் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

ஆனால் முதலில் மனைவி யார் என்ற விவரம் அறியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவர் சிந்து என்கிற ஹேமலதா architectஆக பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் மாடலிங், டப்பிங் என கலை துறையிலும் ஈடுபட்டு வருகிறாராம்.
மேலும் இந்த திடீர் திருமணம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பேசியுள்ள நடிகர் வினோத் பாபு. "இதனால் சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. ஆமாங்கோ! கல்யாணம் ஆகிடுச்சுங்கோ. லவ் பண்ணுங்கோ பாஸ் லைப் நல்ல இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.