
மறைந்த பிரபல வில்லன் நடிகர் நம்பியாரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறத
மறைந்த பிரபல வில்லன் நடிகர் நம்பியாரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் நம்பியார் குறித்து அறிமுகம் தேவை இல்லை. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான நடிகர்களில் அவரும் ஒருவர். எம்.ஜி.ஆர், சிவாஜி படம் என்றாலே வில்லன் ரோல் நம்பியார் தான். என்னதான் படத்தில் கொடூர வில்லனாக இருந்தாலும் நம்பியார் நிஜத்தில் ரொம்பவே சாந்தமானவர்.
இன்று திரையில் தோன்றி மறையும் நடிகர்களின் குடும்பங்கள் கூட மிகவும் பிரபலமாக பேசப்பட்டுவருகிறது. ஆனால் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவையே கட்டி ஆண்ட நடிகர் நம்பியாரின் குடும்பம் குறித்த எந்த தகவலும் பெரிதாக இணையத்தில் வெளிவருவது இல்லை.
இந்நிலையில் நடிகர் நம்பியாரின் மனைவி பெயர் ருக்மணி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகர் நம்பியார் தன் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.
Advertisement
Advertisement