வசூல் வேட்டை செய்து வரும் கமலின் விக்ரம் படம் இதுவரை மொத்தமாக எவ்வளவு வசூல் சாதனை படைத்துள்ளது தெரியுமா.?

வசூல் வேட்டை செய்து வரும் கமலின் விக்ரம் படம் இதுவரை மொத்தமாக எவ்வளவு வசூல் சாதனை படைத்துள்ளது தெரியுமா.?



Vikram movie World wide box office collection

தமிழில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின் பல சூப்பர் ஹூட் படங்களை இயக்கி இன்று முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இவர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வரை வசூலை வாரி இறைத்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Vikram movie

இந்நிலையில் தற்போது வரை படம் மொத்தமாக ரூ. 430 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு படத்தின் வியாபாரம் பல கோடி கணக்கில் நடந்துள்ளது. அப்படி மொத்தமாக சேர்த்து படம் ரூ. 500 கோடி வரை பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றனர்.