கமல்ஹாசனின் விக்ரம் படம் சென்னையில் மட்டும் இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

கமல்ஹாசனின் விக்ரம் படம் சென்னையில் மட்டும் இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா.?



Vikram movie box office collection in Tamil Nadu

முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக வலம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வசூலை வாரி இறைத்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாஸ் காட்டி வருகிறது.

Vikram movie

மேலும் விக்ரம் படம் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் நல்ல வசூல் சாதனை படைத்துள்ள படமாக இருந்து வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 31 நாட்கள் ஆன நிலையில் தமிழகத்தில் மட்டும் விக்ரம் படம் ரூ. 16.63 கோடி வரை வசூலித்துள்ளதாம். விரைவில் ரூ. 17 கோடியை எட்டும் என்கின்றனர்.