நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பா? என்னதான் ஆச்சு அவருக்கு? மேலாளர் வெளியிட்ட தகவல்.!
தமிழ் திரையுலகில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விக்ரம். இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். மேலும் அதற்காக அவர் கடும் முயற்சிகள் மேற்கொண்டு தனது உடலமைப்பையே மாற்றிகொள்வார். மேலும் நடிகர் விக்ரம் ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இதையறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நடிகர் விக்ரமின் மேலாளர் சூரிய நாராயணன், நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு கிடையாது. லேசான காய்ச்சல், நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவது வேதனையளிக்கிறது.
அவர் தற்போது நலமாக உள்ளார். ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும் விக்ரம் தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.