சினிமா

வெற்றி நாயகன்களின் மகன்கள் ஒரே இடத்தில்.. அடுத்த தலைமுறையிலும் தொடரும் நட்பு! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Summary:

ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் ஆகியோரின் மகன்களான அர்ஜித், அமீன், துருவ் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல கெட்அப்பில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சீயான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம். இவர்  ஆதித்ய வர்மா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே இவருக்கென ஏரளமான ரசிகர்கள் உருவாகினர். இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது அப்பாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

மேலும் ஆஸ்கார் நாயகன் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன்,. இசையில் மிகுந்த ஆர்வம் காட்டிவரும் அவர் ஓ காதல் கண்மணி, 2.0 உள்ளிட்ட படங்கள் மற்றும் பல ஆல்பங்களில் தனது தந்தையின் இசையில் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.அமீன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பெருமளவில் வைரலாகி வருகிறது.

 அந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.அமீனுடன் நடிகர் விக்ரமின் மகன் துருவ், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஆகியோர் உள்ளனர். இது வைரலாகி லைக்குகள் குவிந்து வருகிறது. மாபெரும் வெற்றி பெற்ற ஐ படத்தில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் ஆகியோர் இணைந்து ஒன்றாக பணியாற்றியுள்ளனர். 


 


Advertisement