அடேங்கப்பா.. இதெல்லாம் பொன்னியின் செல்வன் பட பிரமோஷனுக்காகவா.! நடிகர் விக்ரமும், திரிஷாவும் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. இதெல்லாம் பொன்னியின் செல்வன் பட பிரமோஷனுக்காகவா.! நடிகர் விக்ரமும், திரிஷாவும் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!


vikram-and-trisha-changed-their-names-in-twitter

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் மற்றும் சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

படம் ரிலீஸாக இன்னும் இரு வாரமே இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தஞ்சை பெரிய கோவிலில் பட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

ponniyin selvan

இந்நிலையில், நடிகை திரிஷா மற்றும் நடிகர் விக்ரமும் இப்படத்தை  வித்தியாசமாக ப்ரமோட் செய்வதற்காக தங்களது டுவிட்டர் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளனர். அதாவது விக்ரம் ஆதித்த கரிகாலன் என்றும் திரிஷா குந்தவை என்றும் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள தங்களது கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றியுள்ளனர்.