சினிமா

தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது...! 

Summary:

vijayspeechabouttnpolitics


தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகரான தளபதியின் சர்க்கார் படம் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் நேற்று இசைவெளியீட்டு விழா நடந்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த இசைவெளியீட்டு விழாவின்போது தளபதி விஜய் அவர்கள் பேசியபோது அரசியலுக்கு வருவதற்கான பேச்சு அதிகமாக தெரிந்தது, ஆனால் அது சர்க்கார் படத்தின் விளம்பரமா இல்லை தளபதி விஜயின் எதிர்கால அரசியலுக்கு தொடக்கமா என தெரியவில்லை. 

மேலும் அவர் பேசியபோது ஒருவன் தன வாழ்க்கையில் வெற்றி பெற எவ்வளவு முயற்சி செய்வானோ, அதுபோலவே ஒருவன் வெற்றி பெற கூடாது என ஒரு கூட்டமே அவனுக்கு எதிராக செயல்படும் என்று கூறினார். 
மேலும் சர்கார் அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று சொல்லி  நீங்கள் வந்து ஓட்டு போடுங்கள், என கூறிவிட்டு படத்தை பாருங்கள் என கூறினேன் என தனது பேச்சினை படத்தின் பக்கம் மாற்றி அவர் பேச்சை நிறைவு செய்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது...! 


Advertisement