சினிமா

29 வருட திரை வாழ்க்கை...இது வேற லெவல் சர்ப்ரைஸ் தான்..வைரலாகும் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

Summary:

29 வருட திரை வாழ்க்கை...இது வேற லெவல் சர்ப்ரைஸ் தான்..வைரலாகும் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும்,அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் செல்லப்பிள்ளையாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் பீஸ்ட் படம் குறித்த முக்கிய தகவல்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றுடன் தளபதி விஜய்யின் 29 வருட திரை வாழ்க்கை நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாகவும், விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாகவும் தளபதி விஜய்யின் ரீசன்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement