சினிமா

துபாயில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த்.. கம்பீரமாக அமர்ந்து செவிலியர்களுடன் சேர்ந்து திரைப்படம் பார்த்த கேப்டன்.! என்ன படம் தெரியுமா.?

Summary:

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார். மேலும் சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடு சென்று வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த விஜயகாந்த், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் புறப்பட்டு சென்றார்.  அங்கு சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தான் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 


 
இதுதொடர்பாக விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், 'நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்." என குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயகாந்துக்கு சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. இந்தநிலையில் விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


Advertisement