சினிமா

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய எபிசோடின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Summary:

Vijay tv serials new episodes starts from coming Wednesday

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சமீப காலமாக நிறுத்துவைக்கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த 1-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கூட்டு குடும்பத்தை மையமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புது தொடர் வரும் புதன்கிழமையில் இருந்து தொடங்கும் என விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சி பதிவிட்டுல அந்த  டிவிட்டர் பதிவில், "பாண்டியன் ஸ்டோர்ஸ் - வரும் புதன்கிழமை இரவு 8 மணிக்கு மீண்டும் தொடர்கிறது நம்ம விஜய் டிவில.." என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக சீரியல் பார்க்க முடியாமல் தவித்துவந்த சீரியல் ரசிகர்கள் தற்போது சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement