விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி! மாப்பிள்ளை போல செம கெத்தா யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி! மாப்பிள்ளை போல செம கெத்தா யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா!


vijay-tv-new-show-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை கவரும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு வார இறுதியும் அனைவரும் ரசிக்கும் வகையில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழா விரைவில் நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக கலக்கலான நிகழ்ச்சிகள் கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

vijay tv

இந்த நிலையில் கடந்த வாரம் எங்க வீட்டு மகாலட்சுமி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது அதனைத் தொடர்ந்து இந்த வாரம், எங்க ஏரியா உள்ளே வராதே என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதில் நடிகர்கள் அனைவரும் பட்டு வேட்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.