வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
தனது அழகான மனைவியை முதல் முறையாக விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்துவந்த மாகாபா!! வைரல் வீடியோ..
விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா தனது மனைவியை முதல் முறையாக விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்துவந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் மற்றும் தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் மாகாபா. ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ஒரு தொகுப்பாளராக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
அதிலும், தொகுப்பாளினி ப்ரியங்கா உடன் சேர்ந்து மாகாபா அடிக்கும் அலப்பறைகளுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் மாகாபா முதல் முறையாக தனது மனைவியை பிரபல விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துவந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சவுண்ட் பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் மாகாபா தனது மனைவியை அழைத்துவந்து அனைவர்க்கும் அறிமுகம் செய்துவைத்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.