தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஒரே நேரத்தில் விஜய் டீவியை விட்டு வெளியேறிய இரண்டு பிரபலங்கள்! என்ன காரணம்?
மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைகாட்சி. புது புது நிகழ்ச்சிகள், புது புது சீரியல் என மக்களை தன் பக்கம் வைத்துள்ளது விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாலும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.
அதுபோன்ற சீரியல்களில் ஒன்றுதான் கல்யாணமாம் கல்யாணம். கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும், ஆடம்பரகமாக வாழ்ந்த பையனுக்கும் ஏற்படும் காதல், அவர்களது கல்யாணம், கல்யாணத்திற்கு பிறகு அவர்களது சொந்த பந்தங்களால் அந்த பெண்ணிற்கு ஏற்படும் கொடுமைகள் இவற்றையோ மையமாக கொண்ட கதை.
இதில் நாயகனாக நடிகை அஜிதைப்போன்று தோற்றம் கொண்ட தேஜஸ் கவ்டா சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், நாயகியாக ஸ்ரீது நாயர் கமலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் நாடகத்தில் இருந்து கதாநாயகன், கதாநாயகி இருவரும் ஓன்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் இரண்டு புதிய முகங்கள் நடிக்கின்றனர்.
இருவரும் தானாக வெளியேறினார்களா அல்லது வெளியேற்றப்பட்டார்களா என தகவல் எதுவம் வெளியாகவில்லை.