சினிமா

ரம்ஜான் அன்று முழு முஸ்லிம் பெண்ணாகவே மாறிய விஜய் டிவி டிடி..! தலையில் முக்காடு அணிந்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்து கூறிய டிடி.!

Summary:

Vijay tv dd ramzan wishes video goes viral

விஜய் தொலைக்காட்சி மூலம்  தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி. பல்வேறு வெற்றி தொடர்களை தொகுத்து வழங்கியுள்ள இவர் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் என்றே கூறலாம்.

சிறுசிறு தொடர்கள், கிடைத்த படங்களில் சிறு சிறு வாய்ப்புகள் என இருந்துவந்த டிடி, ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு புகழின் உச்சத்திற்கே சென்றார். அதன்பின்னர் திருமணம், விவாகரத்து என சோகத்தில் இருந்த இவர் சில காலம் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதையும் நிறுத்தினார்.

தற்போது மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார் டிடி. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் நிலையில், தலையில் முக்காடு அணிந்து இஸ்லாமிய பெண்ணாக மாறி உலகில் உள்ள தனது அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை கூறியுள்ளார் டிடி.


Advertisement