மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி தொகுப்பாளினி டிடி! புகைப்படம் உள்ளே! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி தொகுப்பாளினி டிடி! புகைப்படம் உள்ளே!

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமான ஒருவர் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி. டிவி நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், ஒருசில சினிமா படங்கள் என பலவேறு திறமைகளை கொண்டவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கவே பலரும் காத்திருப்பார்கள். தற்போது சின்னத்திரையில் இவர் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கின்றார். அதையும் தாண்டி டிடி தற்போது ரேடியோவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் டிடி தனது மேக்கப் இல்லா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் இதேபோல் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டார். மேக்கப் இல்லா இந்த ட்ரெண்டை கடந்த சில நாட்களாகவே நடிகைகள் பலரும் பின்பற்றி வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo