உங்கவூட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சிடுப்பா - சென்னை மக்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜு..!



Vijay TV Actor Raju Apologize Chennai Peoples

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் வெற்றியாளர் ராஜு. இவர் பிக் பாஸின் வெற்றியை தொடர்ந்து திரைப்படங்களுக்கு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், விஜய் டிவியில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

பிக் பாஸ் ஜோடி டான்ஸ் 2 பைனலில், பிரம்மாஸ்திரத்தின் படத்தை ப்ரொமோட் செய்யும் வகையில் ரன்வீர் கபூர், நாகார்ஜுனா மற்றும் ராஜமௌலி ஆகியோரும் வருகை தந்து இருந்தனர். அந்த சமயத்தில் ராஜு, ரன்பீருக்கு தமிழ் மொழியில் உள்ள பல்வேறு வட்டார மொழிகளை கற்றுக் கொடுப்பதாக பேசி இருந்தார். 

இதில், சென்னை வட்டார மொழிக்குறித்து மனம் வருத்தப்படும் வகையில் பேசியிருந்தார். ஆனால், அவர் அதனை நகைசுவையாகவே செய்திருந்தாலும், சிலருக்கு அதனால் சோகம் ஏற்பட்டது. இதுகுறித்த கண்டனங்களும் ராஜுவுக்கு எதிராக குவிந்தது. 

இதனையடுத்து, இந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ள ராஜு, "நடிகர் ரன்பீர் கபூருக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக கற்றுக் கொடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என தகவல் பரவியுள்ளது. நகைச்சுவையாக நான் செய்தது இவ்வாறாக மாறியதற்கு வருத்தப்படுகிறேன். யாரும் ஆத்திரமடைய வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.