சினிமா

ரசிகர்களை காப்பாற்ற ஓடிய நடிகர் விஜய் - அதிக கூட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்! வீடியோ

Summary:

Vijay tried to save his fans from accident

சர்க்கார் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் அட்லீயுடன் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். தெறி, மெர்சல் என இரண்டு மாபெரும் வெற்றி படங்களை குடுத்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாக தளபதி 63 படத்தில் இணைந்துள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். மேலும், யோகி பாபு, ஆனந்தராஜ் போன்ற பல்வேறு பிரபலங்கள் சினிமாவில் நடித்துவருகின்றனர்.

https://cdn.tamilspark.com/media/175166my-maxresdefault.jpg

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் நடைபெறும்போது விஜய் ரசிகர்கள் அன்பு தொல்லை தருவதால் ஷூட்டிங்கின்போது தேவை இல்லாத இடையூறுகள் ஏற்படுகின்றது.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கின்போது விஜய் ரசிகர்கள் அதிகம் கூடியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த சுவர் கீழே விழுந்தது. சுவர் கீழே விழுந்த நேரம் பார்த்து அங்கே வந்த நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மீது சுவர் விழாமல் இருக்க ஓடிச்சென்று தடுத்த காட்சி வீடியோவாக பதிவாகி தற்போது வைரலாகிவருகிறது.


 


Advertisement